பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

பொது அறிவியல் - General Science

பொது அறிவியல் – General Science – பொது அறிவு – General Studies / General Knowledge – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (Questions and Answers for Objective Type Examinations)

தமிழ்நாடு தேர்வு பணியாளர் தேர்வானையம் (டி.என்.பி.எஸ்.ஸி – TNPSC) நடத்தும் பொது அறிவியல் – பொது அறிவு (General Science – General Studies) கொள்குறித் தேர்வுகளுக்குப் பயன்படக்கூடிய வினா-விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வினா விடைகள் இந்த வினாவிடைப் பட்டியலில் அவ்வப்போது சேர்க்கப்படும். 1. புதைபடிவங்கள் பற்றிய அறிவியல் பிரிவுக்குப் பெயரென்ன?
  • விடை: தொல்லுயிரியல்.
 2. தொல்லுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
  • விடை: லியோனார்டோ டாவின்சி.
 3. தொல் தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
  • விடை: கேஸ்பர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க் (Kaspar Maria Von Sternberg).
 4. சிற்றினங்களின் தோற்றம் (Origin of Species) என்ற புத்தகத்தை  வெளியிட்டவர் யார்?
  • விடை: சார்லஸ் டார்வின் (Charles Darwin).
 5. இந்திய தொல் தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
  • விடை: பீர்பால் சஹானி (Birbal Sahani).
 6. பாறைகளில் புதை உயிர்ப் படிவங்கள் உருவாவவதற்கு என்ன பெயர்
  • விடை: படிவமாதல்.
 7. இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
  • விடை: டாக்டர் மா.சா. சுவாமிநாதன் (Dr. M.S. Swaminathan).
 8. மரபொத்த உயிரிகளை பிரதிகளாக உற்பத்தி செய்யும் முறைக்குப் பெயரென்ன?
  • விடை:   குளோனிங்.
 9. ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் (Restriction Enzymes), டி.என்.ஏ (DNA) இழையின் குறிப்பிட்ட இடங்களில் துண்டிக்கின்றன. இதனால் இவை வேறு விதமாகவும் அழைக்கைப்படுகின்றன. இவற்றின் மற்றொரு பெயர் என்ன?
  • விடை: மூலக்கூறு கத்திரிக்கோல்.
 10. துண்டிக்கப்பட்ட டி.என்.ஏ துண்டுகளை இ்ணக்கப்பயன்படும் நொதியின் பெயர் என்ன?
  • விடை: லைகோஸ் நொதி.

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.