பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

  1. எப்சத்தின் வேதிப்பெயர் என்ன?
    • விடை: மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் (MgSO4 . 7H2O)
  2. மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்கப் பயன்படும் வேதிப்பொருள் எது?
    • விடை: எப்சம்
  3. அறுவைச் சிகிச்சையில் எலும்பு முறிவுகளைச் சரிசெய்ய பயன்படும் வேதிப்பொருள் எது?
    • விடை: பாரிஸ் சாந்து (கால்சியம் சல்பேட் ஹெமி  ஹைட்ரேட்  – CaSO4 . ½H2O)
  4. ஃபீனைல் என்பது என்ன?
    • விடை: கார்பாலிக் அமிலம்( C6H5OH)
  5. தாவர எண்ணெய் அல்லது விலங்குக் கொழுப்பினை அடர் சோடியம் ஹைடிராக்சைடு கரைசலுடன் சேர்த்து குளிர வைக்கும்போது  கிடைப்பது?
    • விடை: சோப்பு.
  6. பயன்பாட்டைக் குறைத்தல் (Reduce), மீண்டும் பயன்படுத்துதல் (Reuse), மறுசுழற்சி செய்தல் (Recycle) ஆகியவை சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கிய மூன்று வழிமுறைகள்  இவற்றை நாம் எவ்வாறு அழைக்கிறோம். 
    • விடை: 3R
  7. அணுவின் சராசரி விட்டம் என்ன?
    • விடை: 1×10-10 மீட்டர் அதாவது, 0.1×10-9 மீட்டர். அதாவது, 0.1 நேனோமீட்டர்
  8. ஒரு அணுவின் நிறையானதுஅணுக்கருவினுள் அமைந்துள்ள எவை இரண்டையும் சார்ந்திருக்கும்?
    • விடை: புரோட்டான்கள் (Protons) மற்றும் நியூட்ரான்கள் (Neutrons)
  9. அணுக்கருவினுள் காணப்படும் துகள்கள் அழைக்கப்படுகின்றன?
    • விடை: நியூக்ளியான்கள் (Nucleons)
  10. புரோட்டான்களை கண்டறிந்தவர் யார்?
    • விடை: எர்னஸ்ட் ரூதர்போர்டு (Ernest Rutherford)

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.