பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

  1. தாவர செல்லிற்கான வடிவத்தைத் தருவது எது?
    • விடை: செல்லுலோஸ்
  2. விலங்கு செல்களில், செல் பகுப்பின் போது குரோமோசோம்களைப் பிரிக்க உதவுவது எது?
    • விடை: சென்ட்ரியோல் (Centrioles)
  3. செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?
    • விடை: உட்கரு
  4. ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
    • விடை: R.H விட்டேக்கர் 
  5. வேப்ப மரத்தின் இருசொற் பெயர் என்ன?
    • விடை: அசாடிரேக்டா இண்டிகா  
  6. ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகுத் திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு எவ்வாறு அழைக்கப்டுகிறது?
    • விடை: ஒளிச்செறிவு  
  7. ஒளிச்செறிவின் SI அலகு என்ன?
    • விடை: கேண்டிலா
  8. ஒளியின் திறனுக்கான SI அலகு என்ன?
    • விடை: லுமென் (lumen) 
  9. திண்மக் கோணத்தின் SI அலகு என்ன?
    • விடை: ஸ்ட்ரேடியன்
  10. எதனை அடிப்படையாகக் கொண்டு அணுக்கடிகாரங்கள செயல்படுகின்றன?
    • விடை: அணுவினுள் ஏற்படும் அதிர்வுகளை.

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.