
மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
ஆண்டுகள் நூறு போனாலும்
நெகிழி என்றும் மக்காதே!
மக்கா நெகிழி வேண்டாமே
மஞ்சள் பையை எடுப்போமே!
மண்ணைக் கெடுக்கும் நெகிழியை
கையில் எடுக்க வேண்டாமே!
ஆண்டுகள் நூறு போனாலும்
நெகிழி என்றும் மக்காதே!
மக்கா நெகிழி வேண்டாமே
மஞ்சள் பையை எடுப்போமே!
மண்ணைக் கெடுக்கும் நெகிழியை
கையில் எடுக்க வேண்டாமே!
தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை எல்லாம் மாமரங்கள் – அதில்எங்கும் மாமரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் மாந் தோப்பு. எல்லாம் தென்னை மரங்கள் – அதில்எங்கும் தென்னை மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் தென்னந் தோப்பு. எல்லாம் கமுக மரங்கள்எங்கும் கமுக மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இது கமுகந் தோப்பு. [ மேலும் படிக்க …]
வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் ஏழு வண்ண வானவில்அழகான வானவில்!மழையும் சூரியனும் சேர்ந்து வந்த வானவில்லேஎனக்குப் பிடித்த வானவில்லேஅழகான வானவில்லேசிவப்பும் நீலமும் கலந்து வந்த வானவில்லேஅழகான வானவில்லேகுட்டி பாப்பா தன்னுடன் விளையாட வந்த வானவில்லே! – வானவில் – தி. யாழினி – [ மேலும் படிக்க …]
வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை வானத்திலே திருவிழா!வழக்கமான ஒருவிழா இடிஇடிக்கும் மேகங்கள்இறங்கி வரும் தாளங்கள்! மின்னலொரு நாட்டியம்மேடை வான மண்டபம் தூறலொரு தோரணம்தூய மழை காரணம்! எட்டுத்திசை காற்றிலேஏக வெள்ளம் ஆற்றிலே! தெருவிலெல்லாம் வெள்ளமேதிண்ணையோரம் செல்லுமே! தவளை கூடப் பாடுமேதண்ணீரிலே ஆடுமே! [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment