பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

 1. வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் எது?
  • விடை: வைட்டமினோ சிஸ்
 2. வைட்டமின் D (கால்சிஃபெரால்) குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எது?
  • விடை: ரிக்கெட்ஸ்.
 3. வைட்டமின் B1 (தயமின்) குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எது?
  • விடை: பெரி பெரி.
 4. வைட்டமின் C (அஸ்கார்பிக் அமிலம்) குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எது?
  • விடை: ஸ்கர்வி
 5. வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்களைப் பழுக்க வைப்பதற்குப் பயன்படுத்தபபடும்  வேதிப்பொருள் எது?
  • விடை: கால்சியம் கார்பைடு
 6. ஓமின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு அதன் வழியே பாயும் மின்னோட்டத்திற்கு எவ்வாறு இருக்கும்?
  • விடை: நேர்தகவில்.
 7. காந்த விசைக் கோடு்கள் காந்தத்தின் எந்த துருவத்தில் துவங்கும்?
  • விடை: வட திசை.
 8. வளிமண்டலத்தின் அடர்த்தியானது, கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லும்போது என்னவாகும்?
  • விடை: குறையும்.
 9. பாதரசகாற்றழுத்தமானியை உருவாக்கியவர் யார்?
  • விடை: டாரிசெல்லி
 10. நீரியல் அழுத்தி (Hydraulic press) எந்த அடிப்படை விதியின்படி செயல்படுகிறது?
  • விடை: பாஸ்கல் விதி

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.