தகைசால் தமிழர் ஆசிரியர் வாழ்க! வாழ்கவே! – வாழ்த்து மடல் – எழுதியவர் உதயநிதி நடராஜன்
தந்தை பெரியார் அரிச்சுவட்டில்
சமூக நீதி நிலைநாட்டி
மக்கள் இடர் துடைத்திடவே
உங்கள் பயணம் தொடரட்டும்!
பெரியார் பிஞ்சு தந்தவரே
அன்பை அதிலே விதைப்பவரே!
அறிவியல் தமிழை வளர்ப்பவரே
அறியாமை போக்க உழைப்பவரே!
அறிவுச்சுடரை ஏந்தியே
அன்னைத் தமிழைக் காப்பவரே!
எளியோர் வலியோர்சமம் என்றே
ஏற்றத் தாழ்வுகள் களைபவரே!
எண்ணில் அடங்கா சமூகநீதிப் பயணம்
மக்கள் வாழ்வைக் காத்திடவே
ஆற்றும் உரைகள் அறிவுச்சுடரே!
மக்கட்கு ஒவ்வா திட்டங்களை
எதிர்க்கும் அரணாய் இருப்பவரே
எல்லோர்க்கும் எல்லாம் என்பவரே
பகுத்தறிவு நாளேட்டின் ஆசிரியரே!
பகுத்தறிவுப் பகலவன் ஒளியாய் திகழ்பவரே
தகைசால் தமிழர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வாழ்க! வாழ்கவே!
எழுதியவர்: உதயநிதி நடராஜன்
Be the first to comment