பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

  1. திரவங்களின் கீழ்பகுதியில் உள்ள அழுத்தம் மேல்பகுதியில் உள்ளதைவிட, எவ்வாறு இருக்கும்?
    • விடை: அதிகமாக.
  2. மிதப்பு விசையானது பாய்மங்களின் எவை இரண்டையும் சார்ந்தது?
    • விடை: பருமன் மற்றும் அடர்த்தி.
  3. பாலின் தூய்மையைக் கண்டறியப் பயன்படும் கருவி எது?
    • விடை: பால்மானி (லேக்டோமீட்டர் – Lactometer).
  4. எதிரொலியைத் தெளிவாகக் கேட்கவேண்டுமானால், எதிரொலிக்கும் பரப்பு ஒலி மூலத்திலிருந்து குறைந்தபட்சம் இருக்க வேண்டிய தொலைவு என்ன?
    • விடை: 17 மீ
  5. செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?
    • விடை: 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை.
  6. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது?
    • விடை: புதன்
  7. வெள்ளி கோளில் சூரியன் உதிக்கும் திசை எது?
    • விடை: மேற்கு
  8. நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை என்ன?
    • விடை: 8
  9. சூரியன் ஒரு விண்மீனா?
    • விடை: ஆம். சூரியன் ஒரு விண்மீன்.
  10. சூரியனைச் சுற்றிவரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள்களுக்கு என்ன பெயர்?
    • விடை: வால்விண்மீன்

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.