பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

 1. பூஞ்சைகள் சேகரிக்கும் உணவு எது?
  • விடை: கிளைக்கோஜன், எண்ணெய்
 2. வயிற்றிலுள்ள உருளைப் புழுக்களை அழிக்கும் தாவரம் எது?
  • விடை: அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி)
 3. தீராத வயிற்றுப் போக்கு, சீதபேதிஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் எது?
  • விடை: ஏகில் மார்மிலோஸ் (வில்வம்)
 4. எந்த தாவரத்தின் இலைகளும் கனிகளும் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப் பயன்படுகின்றன?
  • விடை: சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை)
 5. மஞ்சள் காமாலை நோய்க்குமருந்தாகப் பயன்படும் தாவரம் எது?
  • விடை: ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழா நெல்லி)
 6. கண்ணினுள் நுழையும் ஒளியின் அளவுக்கேற்ப கண் பாவையின் அளவைக் கட்டுப்படுத்துவது எது?
  • விடை: ஐரிஸ் (கருவிழி) (Iris)
 7. ஒளியை கண்ணின் உள்ளே அனுப்புவது எது?
  • விடை: கண்பாவை (Pupil)
 8. ஒளிக்கதிர்களை மின் தூண்டல்களாக மாற்றி அவற்றை பார்வை நரம்பின் வழியாக மூளைக்கு அனுப்பும் பணியைச் செய்வது எது?
  • விடை: விழித்திரை (Retina)
 9. கண்ணின் வடிவத்தைப் பராமரிக்கும் திரவம் எது?
  • விடை: விட்ரியஸ் திரவம் (பின் கண்ணறை திரவம்)
 10. ஓய்வில் உள்ள ஒரு பொருளை இயக்கத்திற்கு மாற்ற உதவுவது எது?
  • விடை: விசை