டி.என்.பி.எஸ்.சி-ன் பணியாளர் தேர்வுகள் பற்றிய அறிக்கைகளுக்கான தற்காலிக திட்ட அட்டவணை – 2020 (Tentative TNPSC Annual Recruitment Planner 2020)

TNPSC Recruitment Planner 2020

டி.என்.பி.எஸ்.சி-ன் பணியாளர் தேர்வுகள் பற்றிய அறிக்கைகளுக்கான தற்காலிக திட்ட அட்டவணை – 2020 (Tentative TNPSC Annual Recruitment Planner 2020)

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி – TNPSC) 2020-ஆம் ஆண்டில் வெளியிட இருக்கும் பணியாளர் தேர்வுகள் பற்றிய அறிக்கைகளுக்கான / அறிவிப்புகளுக்கான தற்காலிக திட்ட அட்டவணையை (TNPSC Annual Recruitment Planner 2020) வெளியிட்டுள்ளது. அதற்கான இணைய இணைப்பு இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் டிஎன்பிஎஸ்சி-ன் எந்தத் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளிவரும் என்பதைத் தோராயமாகத் தெரிந்துகொள்ளலாம்.

2020-ஆம் ஆண்டின் இந்த தற்காலிக திட்ட அட்டவணையில், இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி தொகுதி-1, தொகுதி-2, தொகுதி-4 (TNPSC Group-I, Group-II, Group-III, Group-IV, etc) உள்ளிட்ட பல தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவரக்கூடிய, தோராயமான மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் பயனாளர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

பயனாளர்கள் டிஎன்பிஎஸ்சி-ன் கீழ்க்கண்ட இணையப்பக்கத்திலிருந்து தற்காலிக திட்ட அட்டவணையைப் (TNPSC Annual Recruitment Planner 2020) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Annual Recruitment Planner 2020 (http://www.tnpsc.gov.in/2020_ARP_Planner_20_12_2019.pdf)

முக்கிய குறிப்பு

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள இந்த கால அட்டவணை ஒரு தற்காலிக திட்ட அட்டவணை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகள்/மாதங்களில் மாற்றஙள் ஏற்படக்கூடும். அதனால், அவ்வப்போது டிஎன்பிஎஸ்சி-ன் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள். மேலும், அவ்வப்போது டிஎன்பிஎஸ்சி-ன் அறிவிப்புகளை செய்தித்தாள்களிலும் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.