
ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!

ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!
பாப்பா அழாதே! – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை பாப்பா, பாப்பா, அழாதே!பலூன் தாரேன்; அழாதே! கண்ணே பாப்பா, அழாதே!காசு தாரேன்; அழாதே! பொன்னே பாப்பா, அழாதே!பொம்மை தாரேன்; அழாதே! முத்துப் பாப்பா, அழாதே!மிட்டாய் தாரேன்; அழாதே! என்ன வேண்டும்? சொல் பாப்பா.எல்லாம் வேண்டுமோ? சொல் பாப்பா. [ மேலும் படிக்க …]
நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை ‘நிலா, நிலா, ஓடிவா. நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம். [ மேலும் படிக்க …]
வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை வானத்திலே திருவிழா!வழக்கமான ஒருவிழா இடிஇடிக்கும் மேகங்கள்இறங்கி வரும் தாளங்கள்! மின்னலொரு நாட்டியம்மேடை வான மண்டபம் தூறலொரு தோரணம்தூய மழை காரணம்! எட்டுத்திசை காற்றிலேஏக வெள்ளம் ஆற்றிலே! தெருவிலெல்லாம் வெள்ளமேதிண்ணையோரம் செல்லுமே! தவளை கூடப் பாடுமேதண்ணீரிலே ஆடுமே! [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment