
அவர் தாம் தந்தை பெரியார்! – ந. உதயநிதி
பகுத்தறிவுப் பகலவனாம்
பார்போற்றும் முதல்வனாம்!
பெண் அடிமைத் தகர்த்தவராம்
பெண்கள் மனதில் நின்றவராம்!
சமூக நீதித் தந்தவராம்
சுய மரியாதைக் கொண்டவராம்!
மக்கள்அனைவரும் சமம் என்றார்
மக்கள் மனதில் ஒளிர்கின்றார்!
பெரியவர் போற்றும் பெரியாரே
பூமிச் சுற்றளவு நடந்தாரே!
அரிய உண்மை சொன்னாரே
அறிஞர் அண்ணாவின் தலைவரே!
கலைஞர் போற்றும் பெரியாரே
அவர்தாம் தந்தை பெரியாரே!
Be the first to comment