பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

  1. நுரையீரல்களை சுற்றி இரு அடுக்குகளை கொண்ட பாதுகாப்பு படலத்தின் பெயர் என்ன?
    • விடை: ப்ளூரா (Pleura)
  2. இரத்த சிவப்பணுக்கள் எங்கு உருவாகின்றன?
    • விடை: எலும்பு மஜ்ஜை
  3. சீறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு எது?
    • விடை: நெஃப்ரான்கள்
  4. இரத்தத்தினை வடிகட்டி சீறுநீ்ரை உருவாக்குவது  எது?
    • விடை: நெஃப்ரான்கள்
  5. காந்தத் தன்மையுள்ள பொருட்கள் எவை?
    • விடை: இரும்பு, கோபால்ட், நிக்கல்
  6. புவியில் காணப்படும் நன்னீரின் அளவு என்ன?
    • விடை: 3% (மூன்று சதவீதம்)
  7. நன்னீரில் குறைந்தபட்சம் மற்றும்  அதிகபட்சமாக கரைந்திருக்கும் உப்புகளின் அளவு என்ன?
    • விடை: 0.05% தொடங்கி 1% 
  8. நீர் சுழற்சியினை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
    • விடை: ஹைட்ராலஜிக்கல் சுழற்சி (Hydrological Cycle).
  9. தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவைப்படும், முதன்மை ஊட்டச்சத்துக்கள் எவை?
    • விடை: நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K) 
  10. ஜிப்சத்தின் வேதிப்பெயர் என்ன?
    • விடை: கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட் (CaSO4.2H2O)

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.