TNPSC – Group-IV – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 4 – தொகுதி-IV

TNPSC - Group-IV

6491 காலிப் பணியிடங்கள் – தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-IV தேர்வு – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 4 – TNPSC Group-IV – Year 2019 – Combined Civil Services Examination – 4

தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-IV-க்கான (TNPSC – Group-IV) 6491 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வை நடத்த உள்ளது.

காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 6491 (தோராயமாக). இந்தத் தேர்வு எழுத அடிப்படைக்கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு; தேர்வு எழுதி டி.என்.பி.எஸ்.ஸி-யின் கீழ்க்கண்ட தொகுதி-4 பணிகளில் சேர விரும்புவோர், இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்:

  • கிராமாக நிர்வாக அலுவலர் (தமிழ்நாடு அமைச்சுப்பணி)
  • இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு அமைச்சுப்பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி)
  • வரித் தண்டலர் – நிலை-1 (தமிழ்நாடு அமைச்சுப்பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி)
  • நில அளவர் (தமிழ்நாடு நில அளவைகள் மற்றும் நிலப் பதிவேடுகள் சார் நிலைப்பணி)
  • வரைவாளர் (தமிழ்நாடு நில அளவைகள் மற்றும் நிலப் பதிவேடுகள் சார் நிலைப்பணி)
  • தட்டச்சர் (தமிழ்நாடு தலமைச் செயலகப்பணி / தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப்பணி)
  • சுருக்கெழுத்து தட்டச்சர் – நிலை-3 (தமிழ்நாடு தலமைச் செயலகப்பணி / தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப்பணி)

இணைய வழியில் விண்ணப்பங்களை பதிவு செய்ய இறுதி நாள்: 14-ஜூலை-2019

மேலும், பதவி / பணிவாரி காலியிடங்கள், முக்கிய தேதிகள், இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை, கொள்குறிவகைத் தேர்வுக்கான பாடத்திட்டம், பதவிக்கேற்ற பிற கல்வித்தகுதிகள், தெரிவு செய்யும் முறை, வயது வரம்பு, போன்ற விவரங்களை அறிய, தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்; அனைத்து விவரங்கள் மற்றும் விண்ணப்பப் பதிவுக்கு டி.என்.பி.எஸ்.சி-யின் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணைய முகவரியைக் க்ளிக் செய்யவும் / தொடவும்:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.