நெருப்புக்கோழி – Ostrich – சிறுவர்களுக்கான பொது அறிவு

நெருப்புக்கோழி - Ostrich

நெருப்புக்கோழி – Ostrich – சிறுவர்களுக்கான பொது அறிவு

பறவை இனங்களிலேயே, மிகப்பெரிய, மிக உயரமான, மற்றும் மிக அதிக எடை கொண்டது நெருப்புக்கோழி (Ostrich). இது ஒரு பறக்க முடியாத பறவை. இந்தப்பறவை ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறது.

  • இது மிக நீண்ட கழுத்து மற்றும் கால்களைக்கொண்டது.
  • இது உலகிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய பறவை. நீண்ட நேரத்திற்கு தொடர்ந்து மணிக்கு 53 கிமீ வேகம் வரை ஓடக்கூடியது. உச்சகட்டமாக மணிக்கு 70 கிமீ வேகத்தில் கூட ஓடக்கூடியது இந்த நெருப்புக்கோழி.
  • நெருப்புக்கோழிகளின் எடை பொதுவாக 63 கிலோகிராம் முதல் 143 கிலோகிராம் வரை இருக்கும்.

நெருப்புக்கோழி - Ostrich
  • ஆண் நெருப்புக்கோழிகள் கறுப்பு நிறத்தில் காணப்படும்.
  • ஆண் நெருப்புக்கோழிகள் பொதுவாக 2.1 மீட்டர் முதல் 2.8 மீட்டர் (அதாவது, 6 அடி 11 அங்குலம் முதல், 9 அடி 2 அங்குலம்) உயரம் வரை வளரக்கூடியவை.


ostriches
  • பெண் நெருப்புக்கோழிகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • பெண் நெருப்புக்கோழிகள் பொதுவாக 1.7 மீட்டர் முதல் 2 மீட்டர் (அதாவது, 5 அடி 7 அங்குலம் முதல், 6 அடி 7 அங்குலம்) உயரம் வரை வளரக்கூடியவை.

மேலும் நெருப்புக்கோழிகள் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளிக்காட்சியை சொடுக்கிப் பார்க்கவும்:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.