ஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு

ஒட்டகச்சிவிங்கி - Giraffe

ஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு

உலகிலேயே மிக உயரமான விலங்கு எது? உலகிலேயே மிகப்பெரிய அசைபோடும் விலங்கு எது? இந்தக்கேள்விகளுக்கு விடை, ஒட்டகச்சிவிங்கி (Giraffe). ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் காணப்படுகின்றன.

பிற விலங்குகளைவிட மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி
  • இவை 4.3 மீட்டர் முதல் 5.7 மீட்டர் (அதாவது, 14.1 முதல் 18.7 அடி) உயரம் வரை வளரக்கூடியவை.
  • இவற்றின் சராசரி எடை 828 கிலோகிராம் முதல் 1192 கிலோகிராம் வரை இருக்கும்.

ஒட்டகச்சிவிங்கி

ஒட்டகச்சிவிங்கி தாவரஉண்ணி (Herbivore) இனத்தைச் சார்ந்தது.

இது மிக உயரமாக இருப்பதால், மற்ற தாவரஉண்ணிகளுக்கு எட்டாத வகையில் வளரும் தாவரங்களையும் (இலை தழைகள், பூக்கள், பழங்கள்), இதனால் எளிதாக எட்டிபிடித்து உண்ண முடியும்.

இது மிக நீண்ட கழுத்து மற்றும் கால்களைக்கொண்டது.giraffe's tongue

இதன் நாக்கு 45 சென்டிமீட்டர் (அதாவது 18 அங்குலம்) நீளம் வரை இருக்கும். நாக்கு நீளமாக இருப்பதால் தழைகளை சுற்றி வளைத்து உண்ணவும், மூக்கை சுத்தப்படுத்தவும் இந்த விலங்குக்கு ஏதுவாக இருக்கும்.

மேலும் ஒட்டகச்சிவிங்கிகள்(Giraffes) பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளிக்காட்சியை சொடுக்கிப் பார்க்கவும்:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.