42 பணியிடங்கள் – உதவி சுற்றுலா அலுவலர் (Assistant Tourist Officer) பதவிக்கான வேலைவாய்ப்பு – டி.என்.பி.எஸ்.சி – ஆண்டு 2019

Assistant Tourist Officer

பொது துணை சேவையில் உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கான (நிலை- 2) வேலைவாய்ப்பு – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – Recruitment of Assistant Tourist Officers (Grade – II) in General Subordinate Service – TNPSC

தமிழ்நாடு பொதுத் துணை சேவையில் (Tamilnadu Subordinate Services) உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கு (நிலை-2 – Assistant Tourist Officer – Grade-II) மொத்தம் 42 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC) விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • பதவி – உதவி சுற்றுலா அலுவலர் (தர வரிசை – 2) – Assistant Tourist Officer – Grade-II
  • ஊதியம் – ரூ. 19500 – ரூ. 62000 (நிலை – 8 – Level – 8)
  • கல்வித் தகுதி
    1. பயணம் மற்றும் சுற்றுலா பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பு (Degree in Travel and Tourism) (அல்லது) ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் சுற்றுலா பிரிவில் பட்டயப் படிப்பு (Any Degree with Diploma in Tourism)
    2. தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் நடத்தும் கணினி அலுவலகத் தானியக்கச் சான்றிதழ் படிப்பு (Certificate Course of Computer on Office Automation) அல்லது அதற்கு இணையான படிப்பு
    3. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை – இளநிலைப்பட்டப் படிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 20-ஆகஸ்டு-2019

மேலும் கல்வித்தகுதி பற்றிய விரிவான விவரங்கள், தேர்வு நாள், இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை, பணியிட ஒதுக்கீடு, வயது வரம்பு, தேர்ந்தெடுக்கப்படும் முறை போன்ற விவரங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி-யின் கீழ்க்கண்ட இணைய முகவரியைப் பார்க்கவும்:

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதனால், டி.என்.பி.எஸ்.சி -ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்த்து, புதிய அறிவிப்புகள் / மாற்றங்கள் உள்ளனவா எனத் தெரிந்துகொள்ளவும்.Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.