கரடி பொம்மை
குழந்தைப் பாடல்கள்

கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கரடி பொம்மை வாங்ககடைக்கு வந்தோம் நாங்க! கேட்ட பொம்மை தாங்ககாசு தருவோம் நாங்க விலை பேசி வாங்கவந்து இருக்கோம் நாங்க ரோஜா வண்ணக் கரடிஎடுத்துத் தாங்க நீங்க!

ஆமணக்கு
குழந்தைப் பாடல்கள்

ஆமணக்கு – (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆமணக்கு வளர்த்தேனே விதைகளதை எடுத்தேனே!செக்கிலிட்டு ஆட்டியேஎண்ணெய்தனை எடுத்தேனேஎண்ணெய்தனை  ஊற்றியேஊர்திதனை இயக்கினேனே!

மழை
குழந்தைப் பாடல்கள்

மழை – சிறுவர் பாடல்கள்– மின்மினிகள் –ந. உதயநிதி

மழை வந்தால் மகிழ்ச்சியேஊரெல்லாம் குளிர்ச்சியே! மயில் வந்து ஆடுமேகுயில் வந்து பாடுமே வெள்ளம் அது ஓடுமேபள்ளம் நோக்கிப் பாயுமே பயிர்ச் செடிகள் செழிக்குமேபூக்கள் எல்லாம் பூக்குமே காய் கனிகள் காய்க்குமே உயிர்கள் எல்லாம் உண்ணுமே!

தொப்பி
குழந்தைப் பாடல்கள்

தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி! வானவில் வண்ண தொப்பிபார்க்க அழகு தொப்பி கண்கள் கவரும் தொப்பிஎண்ணம் பறக்கும் தொப்பி சிறுவர் விரும்பும் தொப்பிஎன் ஆசை தொப்பி! அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி!

விடுமுறை
குழந்தைப் பாடல்கள்

விடுமுறை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

விடுமுறை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கடற்கரைக்குச் சென்றேனேகடல்அலையை ரசித்தேனே! கோளரங்கம் சென்றேனேவிண்வெளியை ரசித்தேனே அறிவியல்அருங்காட்சியகம் சென்றேனேசிந்திக்க லானேனே தொல்பொருள்அருங்காட்சியகம் சென்றேனேதொன்மைதனை உணர்ந்தேனே பூங்காவுக்குச் சென்றேனேபூக்கள்எல்லாம் ரசித்தேனே நூலகங்கள் சென்றேனேஅறிவுதனை வளர்த்தேனே!

குப்பை
குழந்தைப் பாடல்கள்

மக்கும் குப்பை மக்காத குப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

மக்கும் குப்பை மக்காத குப்பை சாலை முழுதும் குப்பைகளேஅசுத்தம் செய்வோர் வருந்தலையேசுத்தம் செய்வோர் வருத்தத்திலே! குப்பையில் இரண்டு வகையுண்டுபிரித்துக் கொடுத்தால் நலமுண்டுஅறிந்து செய்தால் வளமுண்டு!

மழைக்காலம் - மின்மினிகள்
குழந்தைப் பாடல்கள்

மழைக்காலம் – குழந்தைப் பாடல்கள் மின்மினிகள் – ந. உதயநிதி

மழைக்காலம் – குழந்தைப் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி குட்டி குட்டி குட்டிமாதவளை ஆசை கேளம்மா! கோடைக் காலம் போனதம்மாமாரிக் காலம் வந்ததம்மா தவளை எல்லாம் கத்துதம்மாவானவில் மேலே ஏறணுமாம் வண்ணம் தீட்டிக் கொள்ளணுமாம்பச்சைமஞ்சள் சிவப்பு நீலம் வண்ணம் பூசி வந்தம்மாவண்டு பூச்சி கவர்ந்ததம்மா மின்னல் [ மேலும் படிக்க …]

மாம்பழம்
குழந்தைப் பாடல்கள்

மாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

மாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம்அல்வாபோல் மாம்பழம் தங்கநிற மாம்பழம்உங்களுக்கும் வேண்டுமா? இங்கேஓடி வாருங்கள்;பங்குபோட்டுத் தின்னலாம்.

குழந்தைப் பாடல்கள்

பசுவே! – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

பசுவே! – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி பசுவே, பசுவே, உன்னைநான்பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். வாயால் புல்லைத் தின்கின்றாய்.மடியில் பாலைச் சேர்க்கின்றாய். சேர்த்து வைக்கும் பாலெல்லாம்தினமும் நாங்கள் கறந்திடுவோம். கறந்து கறந்து காப்பியிலேகலந்து கலந்து குடித்திடுவோம் !

குழந்தைப் பாடல்கள்

வாழைமரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை

வாழை மரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை வாழைமரம் வாழைமரம்வழவழப்பாய் இருக்கும் மரம் சீப்புச்சீப்பாய் வாழைப்பழம்தின்னத்தின்னக் கொடுக்கும் மரம். பந்திவைக்க இலைகளெலாம்தந்திடுமாம் அந்த மரம். காயும்பூவும் தண்டுகளும்கறிசமைக்க உதவும் மரம். கலியாண வாசலிலேகட்டாயம் நிற்கும் மரம்!