
மக்கும் குப்பை மக்காத குப்பை
சாலை முழுதும் குப்பைகளே
அசுத்தம் செய்வோர் வருந்தலையே
சுத்தம் செய்வோர் வருத்தத்திலே!
குப்பையில் இரண்டு வகையுண்டு
பிரித்துக் கொடுத்தால் நலமுண்டு
அறிந்து செய்தால் வளமுண்டு!
சாலை முழுதும் குப்பைகளே
அசுத்தம் செய்வோர் வருந்தலையே
சுத்தம் செய்வோர் வருத்தத்திலே!
குப்பையில் இரண்டு வகையுண்டு
பிரித்துக் கொடுத்தால் நலமுண்டு
அறிந்து செய்தால் வளமுண்டு!
மரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி தென்னைமரத்தில் ஏறலாம்.தேங்காயைப் பறிக்கலாம். மாமரத்தில் ஏறலாம்.மாங்காயைப் பறிக்கலாம். புளியமரத்தில் ஏறலாம்.புளியங்காயைப் பறிக்கலாம். நெல்லிமரத்தில் ஏறலாம்.நெல்லிக்காயைப் பறிக்கலாம். வாழைமரத்தில் ஏறினால்,வழுக்கிவழுக்கி விழுகலாம்!
மழை வந்தால் மகிழ்ச்சியேஊரெல்லாம் குளிர்ச்சியே! மயில் வந்து ஆடுமேகுயில் வந்து பாடுமே வெள்ளம் அது ஓடுமேபள்ளம் நோக்கிப் பாயுமே பயிர்ச் செடிகள் செழிக்குமேபூக்கள் எல்லாம் பூக்குமே காய் கனிகள் காய்க்குமே உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை எல்லாம் மாமரங்கள் – அதில்எங்கும் மாமரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் மாந் தோப்பு. எல்லாம் தென்னை மரங்கள் – அதில்எங்கும் தென்னை மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் தென்னந் தோப்பு. எல்லாம் கமுக மரங்கள்எங்கும் கமுக மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இது கமுகந் தோப்பு. [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment