
ஆராரோ ஆரி ரரோ – தாலாட்டு – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்
ஆராரோ ஆரி ரரோ
ஆராரோ ஆரி ரரோஅன்பே அன்பே தூங்கம்மா
அன்னை உனது அருகிலம்மா
கதைகள் சொல்வேன் கேளம்மா
அறங்கள் இதில் உண்டம்மா
வளர்வாய் நீயும் நன்றம்மா
அழுகை முகம் ஏனம்மா
சிரித்தால் நீயோ அழகம்மாஇளவம் பஞ்சு தொட்டிலம்மா
தென்றல் காற்று வீசுதம்மா
அழகு நிலவே தூங்கம்மா
அன்பே பாப்பா தூங்கம்மாஆராரோ ஆரி ரரோ
ஆராரோ ஆரி ரரோ

Be the first to comment