
கிளியக்கா-குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர்: உதயநிதி நடராஜன்
சிவப்பு மூக்கு கிளியக்கா
பச்சை உடம்பு அழகக்காபழங்கள் கொய்து தருவேன்கா
சுவைத்து நீயும் மகிழக்காமழை வந்தால் நீயக்கா
எங்கள் வீட்டில் தங்கக்காஉண்ண உணவும் நீரக்கா
உனக்குத் தருவேன் நானக்காகொஞ்சிக் கொஞ்சி பேசக்கா
உந்தன் குரலே அழகக்காபறந்து நீயும் போனதேன்கா
உந்தன் நினைவே வருதக்கா!மீண்டும் நீயே வாஅக்கா
கொஞ்சிப் பேசுவோம் நாமக்கா!சொன்னதைச் சொல்லும் கிளியக்கா
கூடி நாமும் வழவோம்கா !சிவப்பு மூக்கு கிளியக்கா
பச்சை உடம்பு அழகக்கா!

Be the first to comment