
காகம், நரி, மற்றும் பாட்டி சுட்ட வடை – கதையின் பாடல் வடிவம் – பாடல் எழுதியவர்: உதயநிதி நடராஜன்
மரத்தின் அடியில் பாட்டியம்மா
வடையை நேர்த்தியாய் சுட்டாளம்மா
காகம் ஒன்று வந்ததாம்
வடை ஒன்றை எடுத்ததாம்
பறந்து சென்று மரத்தின் மேல் அமர்ந்ததம்மா
காகம் வாயில் வடையம்மா
தந்திரகார நரியோ அதை பார்த்தது,
“அழகாய் இருக்கும் காக்காவே
பாட்டு பாடு அழகாவே”என்று நரியார் சொல்லவே
“கா.. கா .. கா.. கா.. கா.. கா “
என்றே காகம் கரையவேவடை கீழே விழுந்ததம்மா
நரியோ தூக்கி சென்றதம்மா
ஏமாந்த காகம் நின்றதம்மா…
-உதயநிதி நடராஜன்

Be the first to comment