
மெஸ்ஸி பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்
பத்தாம் நம்பர் பாருடா
கொண்டாட்டம் போடுடா
நம்மோட ஸ்டாருடா
மெஸ்ஸிய பாருடா
பத்தாம் நம்பர் பாருடா
கொண்டாட்டம் போடுடா
ஆடப்போகும் ஆட்டத்தில்
எல்லாமே கோலுடா
தடுப்பாட்டம் க்ளோசுடா
அடிதடியும் வேஸ்டுடா
எதிரணிக்கும் மகிழ்ச்சிடா
இவன் ஜெய்க்கும் போதுடா
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
எங்க மெஸ்ஸி ஆடினா
எதிரணிக்குத் திண்டாட்டம்
பத்து அணிகள் சேர்ந்தாலும் முடியாது
பத்தாம் நம்பர் பாருடா
கொண்டாட்டம் போடுடா
மெஸ்ஸி உதச்ச கால்பந்து
இவன் பந்த தடுக்கும் கோலி யாருடா
“கோ……………….ல்” …. “கோ……………….ல்”
வெற்றி மாலை சூடடா..
வெற்றி விழா நமக்குடா..
உலகெல்லாம் கொண்டாடும் மெஸ்ஸிடா
இவன் பின்னால போட்டு போவோம்
இவனோட ஜெர்ஸிடா
பத்தாம் நம்பர் பாருடா
கொண்டாட்டம் போடுடா!
– எழுதியவர்: உதயநிதி நடராஜன்

Be the first to comment