
குயிலக்கா! – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்
குயிலே குயிலே குயிலக்கா
எங்கே இருக்கிற குயிலக்கா
உன்ன நானும் பார்க்கனும்அக்கா
பாடும் அழக ரசிக்கனும்அக்கா
நீயிருக்கும் திசையைச்சொல்லக்கா
எட்டுத் திசையும் தேடிக்கா
உன்னப் பார்க்க முடியலக்கா
பள்ளியில் வாங்கிய பரிசெல்லாம்
உனக்குக் கெடுத்து மகிழனும்அக்கா
எந்தன் ஆசிரியர் நீயக்கா
மறைந்து கற்றது போதும்அக்கா
நேரில் நானும் கற்கனும்அக்கா
எங்கே இருக்கிற குயிலக்கா
உன்ன நானும் பார்க்கம் அக்கா!
கருப்புத் தங்கம் நீயக்கா
குயிலே குயிலே குயிலக்கா!

Be the first to comment