
சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி
கட்ட முள்ள விளையாட்டிது,
கருப்புவெள்ளை வண்ணமிது.ராஜா ராணியும் இருக்குமாம்,
போட்டி போட்டு மகிழலாம்.யானைப் படையும் இருக்குமாம்,
இங்கே குதிரை பாய்ந்து குதிக்குமாம்சிப்பாய் எதிரியை தாக்குமாம்,
தளபதி எதிராக ஓடுமாம்போட்டியை நீயும் போடு,
வென்று விட்டால் ஆடு!

Be the first to comment