அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
விளக்கம்:
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமம் தரும். – குறள்: 663 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும். [ மேலும் படிக்க …]
கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. – குறள்: 496 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் ‘தேர் கடலிலே ஓடாது’ ‘கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. – குறள்: 267 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள். [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment