ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் – குறள்: 579

Thiruvalluvar

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
– குறள்: 579

– அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள்கலைஞர் உரை

அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்மை வருத்தியொழுகும் இயல்புடையாரிடத்தும் ; பழைய நட்புக்கருதிக் கண்ணோட்ட முடையராய் அவர் குற்றத்தைப் பொறுத்தொழுகும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.மு. வரதராசனார் உரை

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து, (அவர் செய்த குற்றத்தைப்) பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.G.U. Pope’s Translation

To smile on those that vex, with kindly face,
Enduring long, is most excelling grace.

 – Thirukkural: 579, Benignity, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.