நீர்க்குமிழி – குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர்: உதயநிதி நடராஜன்
நீர்க்குமிழி – குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர் உதயநிதி நடராஜன் சோப்பு நீரில் நீர்க்குமிழி ஊதி நானும் செய்தேனே காற்றில் மிதந்து செல்லுதே காற்றைத் தாங்கிச் செல்லுதே வண்ணம் பல மாறுதே உருண்டை வானவில் தேயுதே மேலே மேலே செல்லுதே உடைந்தால் கூட மகிழ்வேனே மீண்டும் ஊதி மகிழ்வேனே !
