தமிழ்நாடு வேளாண்மை இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் – 2019 – TNAU – UG Admissions 2019

TNAU - UTNAU - UG Admissions 2019G Admissions 2019

இளநிலை அறிவியல் (ஹானர்ஸ்) – BSc (Hons), இளநிலைத் தொழில்நுட்பம் – BTech

தமிழ்நாடு வேளாண்மை 2019-ஆம் ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் இணைய வழியில் நடைபெறுகின்றன. இதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் Tamil Nadu Agricultural University (TNAU – UG Admissions 2019) வெளியிட்டுள்ளது.

+2 படிப்பிற்குப் பிறகு, வேளாண்மை அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பான 4-ஆண்டு இளநிலைப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்கள் கீழே உள்ள படிப்புகளுக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

  • இளமறிவியல் (ஹானர்ஸ்) வேளாண்மை – B.Sc (Hons.) Agriculture
  • இளமறிவியல் (ஹானர்ஸ்) தோட்டக்கலை – B.Sc (Hons.) Horticulture
  • இளமறிவியல் (ஹானர்ஸ்) வனவியல் – B.Sc (Hons.) Forestry
  • இளமறிவியல் (ஹானர்ஸ்) உணவு, ஊட்டச் சத்தியல், மற்றும் உணவு முறையியல் – B.Sc.(Hons.) Food, Nutrition and Dietetics
  • இளமறிவியல் (ஹானர்ஸ்) பட்டு வளர்ப்பு – B.Sc.(Hons.) Sericulture
  • இளம் தொழில்நுட்பம் (வேளாணமைப் பொறியியல்) – B.Tech. (Agricultural Engineering)
  • இளம் தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பவியல்) B.Tech.(Biotechnology)
  • இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல்) B.Tech.(Energy and Environmental Engineering)
  • இளம் தொழில்நுட்பம் (உணவு தொழில்நுட்பம்) B.Tech.(Food Technology)
  • இளமறிவியல் (ஹானர்ஸ்) – வேளாண் வணிக மேலான்மை – B.Sc.(Hons.) Agri-Business Management

இந்தப் பட்டப் படிப்புகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 14 உறுப்பு மற்றும் 27 இணைப்புக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் அதன் அதிகாரப் பூர்வ இணைய தள முகவரியில் இணை வழியில் 07-ஜூன்-2019 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், கல்வித் தகுதி, உறுப்பு (Constituent) மற்றும் இணைப்புக் (Affiliated) கல்லூரிகளின் பட்டியல், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை பல்கலைகழகத்தின் இந்த முகவரியில் அறியலாம்:

தமிழ்நாடு வேளாண்மப் பல்கலைக் கழகம் – இளநிலை பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள் – Tamil Nadu Agiricultural University – TNAU – UG Admissions 2019

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.