என்ன படிக்கலாம்? – பொறியியல் பிரிவுகளும் அவற்றைத் தேர்ந்தெடுக்கும் வழி முறைகளும் – பொறியியல் இளநிலைப் பட்டப் படிப்பு

Choosing Engineering Courses

பொறியியல் பிரிவுகளும் அவற்றைத் தேர்ந்தெடுக்கும் வழி முறைகளும் (Engineering Disciplines and Tips to Choose them)

எந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்து,  என்ன பொறியியல் பிரிவை எடுக்கலாம் என்று ஆழ்ந்த சிந்தனையில் இருப்பீர்கள். பொறியியல் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பொறியியல் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தப் பகுதியில், பொறியியல் கல்லூரிகளில் உள்ள பிரிவுகளில், நீங்கள் சேரப் போகும் பிரிவை எப்படி தேர்ந்தெடுப்பது (Choosing Engineering Disciplines) என்பதைப் பற்றி பார்ப்போம்.

நீங்கள் இப்போது தேர்ந்தெடுக்கும் பிரிவு, உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு, அதாவது மேற்படிப்பிற்கு அல்லது வேலை வாய்ப்பிற்கு வழி வகுக்குமா என்று தொலைநோக்குப் பார்வையுடன், சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் படிக்கப் போகும் பாடப் பிரிவை தேர்ந்தெடுக்க சில காரணிகள் உள்ளன:

 • உங்கள் விருப்பம் – நீங்கள் எடுக்கப் போகும் பிரிவு, நீங்கள் விரும்பும் பாடமா, அது உங்களுக்கு எளிதாக இருக்குமா என்று எண்ணிப் பாருங்கள்.
 • கல்லூரி – நீங்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரி, சிறந்த கல்லூரியா, அந்தக் கல்லூரியில், உங்கள் விருப்பப் பிரிவு உள்ளதா என்று விசாரித்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில், சில கல்லூரிகள் புதிதாக சில பொறியியல் பிரிவுகளைத் துவங்கலாம். அத்தகைய பிரிவுகளில் போதுமான ஆய்வுக்கூட வசதிகள் உள்ளனவாக என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளவும்.
 • எதிர்காலம் / வேலை வாய்ப்பு – நீங்கள் தேர்ந்து எடுக்கும் பிரிவு, எதிர்காலத்தில், உங்களுக்கு வேலை வாய்ப்புக்கு வழி வகுக்குமா என்று பாருங்கள்.
 • எதிர்காலம் / மேற்படிப்பு / முதுநிலைப் பட்டப் படிப்பு – இளநிலைப் பட்டப் படிப்பு முடித்த பின், நீங்கள் மேல் படிப்பு படிக்க விரும்பினால், உங்கள் பிரிவு தொடர்பான முதுநிலைப் பட்டப் படிப்பு, படிப்பதற்கான வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ளவும். அதாவது, உங்கள் விருப்பப் பிரிவில், மேற்படிப்புகள் உள்ளனவா, சிறந்த கல்லூரிகளில், அத்தகைய, பிரிவுகள் உள்ளனவா, மேற்படிப்பிற்குப் பின் உங்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கிறதா என்பதைப் பற்றி எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
 • வெளிநாட்டில் மேற்படிப்பு / வேலை வாய்ப்பு – நீங்கள் படித்து முடித்த பின், நீங்கள் அயல்நாடு செல்ல விரும்பினால், உங்கள் படிப்பு தொடர்பான மேற்படிப்பு அல்லது வேலை வாய்ப்பு வசதிகள் அங்கு உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கீழ்க்கண்ட பாடப்பிரிவுகள் பொதுவாக பெரும்பான்மையான கல்லூரிகளில் இருக்கும் பொறியியல் பிரிவுகள்:

 • எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்ஜினீயரிங் (Electronics and Communication Engineering)
 •  கம்ப்யூட்டெர் சயின்ஸ் அண்ட் எஞ்ஜினீரிங் (Computer Science and Engineering)
 • எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் எஞ்ஜினீயரிங் (Electrical and Electronics Engineering)
 • மெக்கானிக்கல் எஞ்ஜினீயரிங் (Mechanical Engineering)
 •  சிவில் எஞ்ஜினீயரிங் (Civil Engineering)

கீழ்க்கண்ட பிரிவுகளில் சில, தமிழ்நாட்டில்  உள்ள குறிப்பிட்ட சில கல்லூரிகளில் கூடுதலாக இருக்கும்:

 • கெமிக்கல்  எஞ்ஜினீயரிங் (Chemical Engineering)
 • இன்ஃப்ர்மேஷன் டெக்னாலஜி (Information Technology)
 • எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் எஞ்ஜினீயரிங் (Electronics and Instrumentation Engineering)
 • கம்ப்யூட்டெர்அண்ட் கம்யூனிகேஷன் எஞ்ஜினீயரிங் (Computer and Communication Engineering)
 • இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் கண்ட்ரோல் எஞ்ஜினீயரிங் (Instrumentation and Control Engineering)
 • பயோமெடிக்கல் எஞ்ஜினீயரிங் (Biomedical Engineering)
 • மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் (Medical Electronics)
 • டெக்ஸ்டைல் டெக்னாலஜி (Textile Technology)
 • ஹேண்ட்லூம் அண்ட் டெக்ஸ்டைல் டெக்னாலஜி (Handloom and Textile Technology)
 • ப்ரொடக்ஷன் எஞ்ஜினீயரிங் (Production Engineering)
 • மெக்காட்ரானிக்ஸ் எஞ்ஜினீயரிங் (Mechatronics Engineering)
 • மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமேஷன் எஞ்ஜினீயரிங் (Mechanical and Automation Engineering)
 • Mechanical Engineering (Sandwich)
 • இன்டஸ்ட்ரியல் எஞ்ஜினீயரிங் (Industrial Engineering)
 • இன்டஸ்ட்ரியல் எஞ்ஜினீயரிங் அண்ட் மேனேஜ்மெண்ட் (Industrial Engineering and Management)
 •  ரோபாட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் (Robotics and Automation)
 • இன்டஸ்ட்ரியல் பயோ  டெக்னாலஜி (Industrial Bio-Technology)
 • ஏரோனாட்டிக்கல் எஞ்ஜினீயரிங் (Aeronautical Engineering)
 • ஏரோஸ்பேஸ் எஞ்ஜினீயரிங் (Aerospace Engineering)
 • ஆட்டோமொபைல் எஞ்ஜினீயரிங் (Automobile Engineering)
 • மெட்டீரியல் எஞ்ஜினீயரிங் (Material Science and Engineering)
 • மேனுஃபேக்சரிங்க் எஞ்ஜினீயரிங் (Manufacturing Engineering)
 • அக்ரிகல்சுரல் எஞ்ஜினீரிங் (Agricultural Engineering)
 • என்விரன்மெண்டல் எஞ்ஜினீயரிங் (Environmental Engineering)
 • ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் (Geo Informatics Engineering)
 • பாலிமெர் டெக்னாலஜி (Polymer Technology​)
 • ரப்பர் அன்ட் ப்லாஸ்டிக் டெக்னாலஜி (Rubber and Plastic Technology)
 • லெதர் டெக்னாலஜி (Leather Technology)
 • ப்ரிண்டிங் டெக்னாலஜி (Printing Technology)
 • ஃபேஷன் டெக்னாலஜி (Fashion Technology)
 • மைனிங் எஞ்ஜினீரிங் (Mining Engineering)
 • பெட்ரோலிய்ம் எஞ்ஜினீயரிங் (Petroleum Engineering)
 • கெமிக்கல் அண்ட் எலெக்ட்ரோகெமிக்கல் எஞ்ஜினீயரிங் (Chemical & Electrochemical Engineering)
 • பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி (Petrochemical Technology)
 • ஃபார்மாசிட்டிக்கல் டெக்னாலஜி (Pharmaceutical Technology)
 • ஃபுட் டெக்னாலஜி (Food Technology)
 • மெரைன் எஞ்ஜினீயரிங் (Marine Engineering)
 • ஆர்க்கிடெக்சர் (Architecture)

இந்தியாவில், நீங்கள் எந்தக் கல்லூரியில் சேர்வதாக இருந்தாலும், இந்த ஆலோசனைகள் உங்களுக்குப் பொருந்தும்.

மேலும், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகளுக்காக (Tamilnadu Engineering Admissions) விண்ணப்பித்து,  கலந்தாய்வில் பங்கு பெற இருக்கும் மாணவர்கள், அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் எந்த கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும், அந்த கல்லூரிகளில் என்ன பிரிவுகள் உள்ளன என்றும் அறிய விரும்பும் மாணவர்கள் கீழ்க்கண்ட இணைய முகவரியை பார்க்கலாம்:

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகள் (Anna University – Affiliated Colleges)

பொதுவாக பொறியியல் படிப்புகள் 4-ஆண்டுகள் பயிலும் B.E. (Bachelor of Engineering – இளநிலைப் பொறியியல்) அல்லது B.Tech (Bachelor of Technology -இளநிலைத் தொழில்நுட்பம்) என்று இரண்டு விதமாக அழைக்கப் படுகின்றன. இவை இரண்டுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. இவை சமமான 4-ஆண்டு படிப்புகளே தவிர, பெயரளவில் மட்டுமே இவை வேறுபட்டு உள்ளன.

பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகளில்,  பெரும்பாலான பிரிவுகள் B.E. படிப்புகளாக உள்ளன. சில கல்லூரிகளில், சில பிரிவுகள் B.Tech ஆக உள்ளன.

B.Arch. (Bachelor of Architecture – இளநிலைக் கட்டடக் கலை) என்பதும் ஒரு கட்டடக் கலைப் பொறியியல் பிரிவுதான். ஆனால் இது 5-ஆண்டுகள் பயிலும் படிப்பாகும்.

மேலும், எங்கு படிக்கலாம்? அல்லது பொறியியல் கல்லூரிகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றிய வழிமுறைகளை அறிய இங்கு க்ளிக் செய்யவும் / தொடவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.