என்ன படிக்கலாம்? தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் – Tamilnadu Engineering Admissions – TNEA – 2019

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் 2019 (Tamilnadu Engineering Admissions 2019 – TNEA 2019)

பன்னிரெண்டாம் வகுப்பு (+2) முடித்த மாணவர்களுக்கான, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகளை ( Tamilnadu Engineering Admissions – TNEA 2019) இந்த ஆண்டு (2019), தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த உள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பில் (+2) கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics) மற்றும் வேதியியல் (Chemistry) பாடங்களை படித்த மாணவர்கள்,  மற்றும் தொழில் கல்வி (Vocational Stream) பயின்ற மாணவர்கள், கீழ்க்கண்ட கல்லூரிகளில் சேர்ந்து இளநிலைப் பொறியியல் பட்டப் படிப்பு படிப்பதற்கு, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு பொறியியல் (B.E / BTech) சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுகள் இணைய வழியில், மே மாதம் இரண்டாம் தேதி (02-05-2019) முதல் மே மாதம் முப்பத்தியொன்றாம் தேதி (31-05-2019) வரை நடைபெறும். இந்த ஆண்டு (2019), தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மற்றும் கலந்தாய்வு முழுவதும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால், இணைய வழியாக நடத்தப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வெளியில் எங்கிருந்து வேண்டுமானாலும், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இந்த வசதி இல்லாதவர்கள், “தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள்” (TNEA Facilitation Centers – TFC) உதவியுடன் விண்ணப்பிக்கலாம். இந்த உதவி மையங்களின் பட்டியலை கீழ்க்கண்ட இணைய முகவரியில் பார்க்கலாம்:

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள்

இளநிலைப் பொறியியல் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பப் பதிவை கீழ்க்கண்ட இணைய முகவரியில், செய்யலாம்:

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் 2019  (Tamilnadu Engineering Admissions 2019 – TNEA 2019)

B.Arch (Architecture) பி.ஆர்க் (கட்டடக் கலை) படிப்புக்கான சேர்க்கை பின்னர் அறிவிக்கபடும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் (DOTE) B.E / B.Tech பட்டப் படிப்பு சேர்க்கை 2019-2020 விளம்பர அறிக்கையில் (9799/ECA1/2019) குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதிக தகவலுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணைய தளத்தைப் பார்க்கலாம்:

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (Directorate of Technical Education – DOTE)

பொறியியல் பிரிவுகள் பற்றியும் அவற்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது பற்றியும் குருவிரொட்டியின் கல்வி பகுதியில் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

கலந்தாய்வுக்கு முன் பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கத் தயாராவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள குருவிரொட்டியின் கல்விப் பகுதியைப் பார்க்கவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.