மோப்பக் குழையும் அனிச்சம் – குறள்: 90

மோப்பக் குழையும் அனிச்சம்
அனிச்சப் பூ

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
குறள்: 90

– அதிகாரம்: விருந்தோம்பல் பால்: அறம்கலைஞர் உரை

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இயல்பாக மென்மையாகவுள்ள பூக்களுள்ளும் மிக மென்மையானதாகச் சொல்லப்படும் அனிச்சப் பூவும் மோந்தால் மட்டும் வாடும்; ஆனால், தன்மானமுள்ள விருந்தினரோ, வீட்டாரின் முகம் வேறுபட்டு நோக்கிய மட்டில் வாடிவிடுவர்.மு.வரதராசனார் உரை

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.G.U. Pope’s Translation

The flower of ‘Anicha’ withers away,
if you but its fragrance inhale;
If the face of the host cold welcome convey,
the guest’s heart within him will fail.

Thirukkural: 90, Hospitality, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.