அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் – குறள்: 681

Thiruvalluvar

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம்
பண்புஉடைமை தூதுஉரைப்பான் பண்பு.
– குறள்: 681

– அதிகாரம்: தூது, பால்: பொருள்கலைஞர் உரை

அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர்
பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய
தகுதிகளாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மக்களிடத்து அன்பாயிருத்தலும்; ஆட்சித் தொழிற்கேனும் அமைச்சுத் தொழிற்கேனும் ஆசிரியத் தொழிற்கேனும் ஏற்ற வகுப்பிலும் குடும்பத்திலும் பிறந்திருத்தலும்; அரசர் விரும்பத்தக்க சிறந்த தன்மைகளுடையனா யிருத்தலும்; தூது சொல்வானுக்கு உரிய இலக்கணங்களாம்.மு. வரதராசனார் உரை

அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.G.U. Pope’s Translation

Benevolence, high birth the courtesy kings love;-
These qualities the envoy of a king approve.

 – Thirukkural: 681, The Envoy, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.