அணில் – அழ. வள்ளியப்பா கவிதை
அணிலே, அணிலே ஓடி வா
அழகு அணிலே ஓடி வா.
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா.
பாதிப் பழம் உன்னிடம்
பாதிப் பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.
அணிலே, அணிலே ஓடி வா
அழகு அணிலே ஓடி வா.
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா.
பாதிப் பழம் உன்னிடம்
பாதிப் பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.
அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறன்அழீஇப் பொய்த்து நகை. – குறள்: 182 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது; அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு [ மேலும் படிக்க …]
தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை எல்லாம் மாமரங்கள் – அதில்எங்கும் மாமரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் மாந் தோப்பு. எல்லாம் தென்னை மரங்கள் – அதில்எங்கும் தென்னை மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் தென்னந் தோப்பு. எல்லாம் கமுக மரங்கள்எங்கும் கமுக மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இது கமுகந் தோப்பு. [ மேலும் படிக்க …]
மாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம்அல்வாபோல் மாம்பழம் தங்கநிற மாம்பழம்உங்களுக்கும் வேண்டுமா? இங்கேஓடி வாருங்கள்;பங்குபோட்டுத் தின்னலாம்.
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Favourite rhyme of most 80’s kids.. back to school memories..
அழ. வள்ளியப்பா, குழந்தைகளுக்கு மட்டும் கவிஞர் அல்ல. நமக்கும் தான் போலிருக்கிறது. 🙂