தட்டான்
இயல் தமிழ்

தட்டான் – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – உதயநிதி நடராஜன்

தட்டான் – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – உதயநிதி நடராஜன் வட்ட முகத் தட்டான்கொசுப்பிடிக்க வாங்க! மழை மேகம் வருதுசீக்கிரமா வாங்க மலேரியா டெங்குக் காய்ச்சல் கொசுக்கள் பறப்புதுங்க கூட்ட மாக வாங்க கொசுப்புடிச்சுப் போங்க நோய் தடுத்துப் போங்கஎங்க மருத்துவரே நீங்கநன்றிசொல்வோம் நாங்க!

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர்
இயல் தமிழ்

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன்

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன் பள்ளிகள் பலதந்த பெருந்தகையே!குழந்தைகளுக்கு உணவளித்த உத்தமனேஉழவுத் தொழில் காக்க அணைகள் பல கட்டிய காவியமே, எளிமையின் எழிலோவியமேவாழ்க உன்புகழ் வான்முட்டும் அளவுக்கு!

டாமினோ
குழந்தைப் பாடல்கள்

டாமினோ – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

டாமினோ – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி வண்ண வண்ண டாமினோவரிசை யாக டாமினோ!பல வடிவ வரிசையில்அடுக்கி வைத்த டாமினோபல லட்சம் அட்டைகள்அடுக்கி வைத்த டாமினோதட்டிப் பார்த்து மகிழவேசரிந்து விழும் டாமினோ!

மஞ்சப்பை
குழந்தைப் பாடல்கள்

மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆண்டுகள் நூறு போனாலும்நெகிழி என்றும் மக்காதே!மக்கா நெகிழி வேண்டாமேமஞ்சள் பையை எடுப்போமே!மண்ணைக் கெடுக்கும் நெகிழியைகையில் எடுக்க வேண்டாமே!

கரடி பொம்மை
குழந்தைப் பாடல்கள்

கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கரடி பொம்மை வாங்ககடைக்கு வந்தோம் நாங்க! கேட்ட பொம்மை தாங்ககாசு தருவோம் நாங்க விலை பேசி வாங்கவந்து இருக்கோம் நாங்க ரோஜா வண்ணக் கரடிஎடுத்துத் தாங்க நீங்க!

ஆமணக்கு
குழந்தைப் பாடல்கள்

ஆமணக்கு – (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆமணக்கு வளர்த்தேனே விதைகளதை எடுத்தேனே!செக்கிலிட்டு ஆட்டியேஎண்ணெய்தனை எடுத்தேனேஎண்ணெய்தனை  ஊற்றியேஊர்திதனை இயக்கினேனே!

மழை
குழந்தைப் பாடல்கள்

மழை – சிறுவர் பாடல்கள்– மின்மினிகள் –ந. உதயநிதி

மழை வந்தால் மகிழ்ச்சியேஊரெல்லாம் குளிர்ச்சியே! மயில் வந்து ஆடுமேகுயில் வந்து பாடுமே வெள்ளம் அது ஓடுமேபள்ளம் நோக்கிப் பாயுமே பயிர்ச் செடிகள் செழிக்குமேபூக்கள் எல்லாம் பூக்குமே காய் கனிகள் காய்க்குமே உயிர்கள் எல்லாம் உண்ணுமே!

தொப்பி
குழந்தைப் பாடல்கள்

தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி! வானவில் வண்ண தொப்பிபார்க்க அழகு தொப்பி கண்கள் கவரும் தொப்பிஎண்ணம் பறக்கும் தொப்பி சிறுவர் விரும்பும் தொப்பிஎன் ஆசை தொப்பி! அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி!

விடுமுறை
குழந்தைப் பாடல்கள்

விடுமுறை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

விடுமுறை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கடற்கரைக்குச் சென்றேனேகடல்அலையை ரசித்தேனே! கோளரங்கம் சென்றேனேவிண்வெளியை ரசித்தேனே அறிவியல்அருங்காட்சியகம் சென்றேனேசிந்திக்க லானேனே தொல்பொருள்அருங்காட்சியகம் சென்றேனேதொன்மைதனை உணர்ந்தேனே பூங்காவுக்குச் சென்றேனேபூக்கள்எல்லாம் ரசித்தேனே நூலகங்கள் சென்றேனேஅறிவுதனை வளர்த்தேனே!

குப்பை
குழந்தைப் பாடல்கள்

மக்கும் குப்பை மக்காத குப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

மக்கும் குப்பை மக்காத குப்பை சாலை முழுதும் குப்பைகளேஅசுத்தம் செய்வோர் வருந்தலையேசுத்தம் செய்வோர் வருத்தத்திலே! குப்பையில் இரண்டு வகையுண்டுபிரித்துக் கொடுத்தால் நலமுண்டுஅறிந்து செய்தால் வளமுண்டு!