பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை

பெண் கல்வி

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை

பெண்களால் முன்னேறக் கூடும் – நம்
வண்தமிழ் நாடும் எந் நாடும்!
கண்களால் வழிகாண முடிவதைப் போலே!
கால்களால் முன்னேற முடிவதைப் போலே!
பெண்களால் முன்னேறக் கூடும்!

படியாத பெண்ணினால் தீமை! – என்ன
பயன்விளைப் பாளந்த ஊமை?
நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்ல
நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!
பெண்களால் முன்னேறக் கூடும்!

பெற்றநல் தந்தைதாய் மாரே, – நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண் கல்வியாலே, – முன்
னேறவேண் டும் வைய மேலே!
பெண்களால் முன்னேறக் கூடும்!

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.