மழை – இயற்கை – பாரதிதாசன் கவிதை

Rain

மழை (இயற்கை)பாரதிதாசன் கவிதை

வானத்தி லேபிறந்த மழையே வா! – இந்த
வையத்தை வாழவைக்க மழையே வா!
சீனிக்கரும்பு தர மழையே வா! – நல்ல
செந்நெல் செழிப்பாக்க மழையே வா!
கானல் தணிக்க நல்ல மழையே வா! – நல்ல
காடு செழிக்க வைக்க மழையே வா!
ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் – நீ
அழகுப டுத்தநல்ல மழையே வா!

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.