கிழமை – பாரதிதாசன் கவிதை
ஞாயிறுதான் ஒன்று-பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று-பின்
வந்த புதன் நான்கு
தூய்வியாழன் ஐந்து-பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு– இதைத்
தவறாமற் கூறு.
ஞாயிறுதான் ஒன்று-பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று-பின்
வந்த புதன் நான்கு
தூய்வியாழன் ஐந்து-பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு– இதைத்
தவறாமற் கூறு.
வாழை மரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை வாழைமரம் வாழைமரம்வழவழப்பாய் இருக்கும் மரம் சீப்புச்சீப்பாய் வாழைப்பழம்தின்னத்தின்னக் கொடுக்கும் மரம். பந்திவைக்க இலைகளெலாம்தந்திடுமாம் அந்த மரம். காயும்பூவும் தண்டுகளும்கறிசமைக்க உதவும் மரம். கலியாண வாசலிலேகட்டாயம் நிற்கும் மரம்!
முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை படிப்பும் பேச்சும் இயற்றமிழ்பாடும் பாட்டே இசைத்தமிழ்நடிப்பும் கூத்தும் சேர்ந்ததேநாடகத் தமிழ் என்பார்கள்முடிக்கும் மூன்றும் முத்தமிழேமுத்தமிழ் என்பது புத்தமுதேமுடித்த வண்ணம் நம் தமிழேமுத்தமிழ் என்றே சொல்வார்கள்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் விளக்கம்: காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment