கற்றதனால் ஆய பயனென்கொல் – குறள்: 2

கற்றதனால் ஆய பயனென்கொல்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
– குறள்: 2

– அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம்கலைஞர் உரை

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழாதவராயின்; நூல்களைக் கற்றவர்க்கு அக்கல்வியால் உண்டான பயன் யாதாம்?மு. வரதராசனார் உரை

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?G.U. Pope’s Translation

No Fruit have men of all their studied lore,
Save they the ‘Purely Wise One’s’ feet adore.

– Thirukkural: 2, The Praise of God, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.