
யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கயம்
- வேழம்
- களிறு
- பிளிறு
- களபம்
- மாதங்கம்
- கைம்மா
- வாரணம்
- அஞ்சனாவதி
- அத்தி
- அத்தினி
- அரசுவா
- அல்லியன்
- அனுபமை
- ஆனை
- இபம்
- இரதி
- குஞ்சரம்
- வல்விலங்கு
- கரி
- அஞ்சனம்.
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி – மூதுரை – ஔவையார் நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றிஎன்று தருங்கொ லெனவேண்டா – நின்றுதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்தலையாலே தான்தருத லால். – மூதுரை (ஔவையார்) விளக்கம் நிலைபெற்று சோர்ந்துவிடாமல் வளர்கின்ற தென்னையானது தன் அடியால் உண்ட தண்ணீரை தன் முடியாலே [ மேலும் படிக்க …]
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு. – குறள்: 951 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும்கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில்பிறந்தவர்களாகக் கருத முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் [ மேலும் படிக்க …]
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்பொன்றாது நிற்பதுஒன்று இல். – குறள்: 233 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்-தனக்கு இணையில்லாவாறு [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Good collection. We can add the following words to the list
பகடு