அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள்: 241

Thiruvalluvar

அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள்செல்வம்
பூரியார் கண்ணும் உள. – குறள்: 241

– அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம்கலைஞர் உரை

கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம் கூடக் கோடிக்கணக்கில்
செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட்
செல்வத்துக்கு ஈடாகாது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது அருளாகிய செல்வமே; மற்றப் பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்திலும் உள்ளன.மு. வரதராசனார் உரை

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.G.U. Pope’s Translation

Wealth ‘mid wealth is wealth ‘kindliness;
Wealth of goods the vilest too posses.

 – Thirukkural: 241, The Possession of Benevolence, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.