அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான் – குறள்: 635

Thiruvalluvar

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை.
– குறள்: 635

– அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள்



கலைஞர் உரை

அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசியலறங்களை யறிந்து தனக்குரிய கல்விநிறைந்து அடங்கிய சொல்லையுடையவனாய்; எக்காலத்திற் கேற்பவும் வினைசெய்யுந் திறங்களை அறிந்தவன் , அரசனுக்குச் சூழ்ச்சித் துணையாவான்.



மு. வரதராசனார் உரை

அறத்தை அறிந்தவனாய் அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.



G.U. Pope’s Translation

The man who virtue knows, has use of wise and plesant words, With plans for every season apt, in counsel aid affords.

 – Thirukkural: 635, The Officeof Minister of State, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.