பொய்யாமை அன்ன புகழ் இல்லை – குறள்: 296

Thiruvalluvar

பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
– குறள்: 296

– அதிகாரம்: வாய்மை, பால்: அறம்



கலைஞர் உரை

பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு
எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த
வாழ்வேயாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இம்மையில் ஒருவனுக்கு பொய்சொல்லாமை போன்ற புகழ்க் கரணகம் (காரணம்) வேறில்லை; உடம்பு வருந்தி எதுவுஞ் செய்யாமலே அது அவனுக்கு மறுமைக்கு வேண்டிய எல்லா அறங்களையுந் தரும்.



மு. வரதராசனார் உரை

ஒருவனுக்குப் பொய் இல்லாமல் வாழ்தலைப் போன்ற புகழ்நிலை வேறொன்றும் இல்லை; அஃது அவன் அறியாமலே அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.



G.U. Pope’s Translation

No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.

 – Thirukkural: 296, Veracity, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.