செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை
தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறது.
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறது.
அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வா போலப் பழம்தருது.
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில் லாமல் காய்க்கிறது.
அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போலப் பழுக்கிறது.
சின்னஞ் சிறுவன் நானும்ஒரு
செடியை நட்டு வளர்ப்பேனே !
Be the first to comment