நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்விழுமம் துடைத்தவர் நட்பு. – குறள்: 107 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்லுவதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது. [ மேலும் படிக்க …]
அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரம்தளிர்த்து அற்று. – குறள்: 78 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலை வானத்தில்பட்டமரம் தளிர்த்தது போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்,பாலை நிலத்தின் [ மேலும் படிக்க …]
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. – குறள்: 101 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை “வாராது வந்த மாமணி” என்பதுபோல், “செய்யாமற் செய்த உதவி”என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா. [ மேலும் படிக்க …]
© 2019 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment