தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல். – குறள்: 67
– அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம்
கலைஞர் உரை
தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
ஞா. தேவநேயப் பாவாணர்
தந்தை கல்வித் திறமையுள்ள தன் மகனுக்குச் செய்யவேண்டிய நன்மையாவது, கற்றோரவையின்கண் முதன்மையாயிருக்குமாறு அவனைச் சிறந்த கல்விமானாக்குதல்.
மு.வரதராசனார் உரை
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
G.U. Pope’s Translation
Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat.
– Thirukkural: 67, The Wealth of Children, Virtues


Be the first to comment