நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. – குறள்: 274 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. – குறள்: 790 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடையவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள். – குறள்: 509 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்துணைச் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment