தம்மின் பெரியார் தமரா – குறள்: 444

தம்மின் பெரியார் தமரா

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
– குறள்: 444

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்கலைஞர் உரை

அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவு முதலியவற்றால் தம்மினும் பெரியவர் தமக்குத் துணைவராமாறு அவர் வழிநின் றொழுகுதல்; அரசர்க்குரிய வலிமைக ளெல்லாவற்றுள்ளுந் தலையானதாம்.மு. வரதராசனார் உரை

தம்மை விட, ( அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தாராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.G.U. Pope’s Translation

To live with men of greatness that their own excels, As cherished friends, is greatest power that with a monarch dwells.

 – Thirukkural: 444, Seeking the Aid of Great Men, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.