ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் – குறள்: 136

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து
.
– குறள்: 136

– அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம்கலைஞர் உரை

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒழுக்கக் கேட்டால் தமக்கும் குலவிழிபாகிய கேடுண்டாவதை யறிந்து , அறிவுரையோர் ஒழுக்கத்தில் தளரார் .மு. வரதராசனார் உரை

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.G.U. Pope’s Translation

The strong of soul no jot abate of strict decorum’s laws, Knowing that due decorum’s breach foulest disgrace will cause.

 – Thirukkural: 136,The Possession of Decorum, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.