கெடுவாக வையாது உலகம் – குறள்: 117

Thiruvalluvar

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

– குறள்: 117

– அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம்



கலைஞர் உரை

நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன்
காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நடுநிலை நின்று அறத்தின்கண் தங்கினவனது வறுமையை ; உயர்ந்தோர் கேடாகக் கருதார் .



மு. வரதராசனார் உரை

நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என்று கொள்ளாது உலகம்.



G.U. Pope’s Translation

The man who justly lives, tenacious of the right,
In low estate is never low to wise man’s sight.

 – Thirukkural: 117, Impartiality, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.