உறல்முறையான் உட்பகை தோன்றின் – குறள்: 885

Thiruvalluvar

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
குறள்: 885

– அதிகாரம்: உட்பகை, பால்: பொருள்.



கலைஞர் உரை

நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது
அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புறம்பாக உறவு முறையொடு கூடிய உட்பகை ஒருவனுக்கு, சிறப்பாக அரசனுக்கு, உண்டாகுமாயின்;அது அவனுக்கு இறக்குந் தன்மையான பல குற்றத்தையும் உண்டுபண்ணும்.



மு. வரதராசனார் உரை

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.



G.U. Pope’s Translation

Amid one’s relatives if hidden hath arise,
‘Twill hurt inflict in deadly wise.

Thirukkural: 885, Enmity Within, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.